சென்னை, செப்.8-

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கூடியது. இந் த நிகழ்வில் , காவல்துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்தார்.தமிழ்நாட்டில் பெண்களை தரம்தாழ்ந்து பேசுவது வேண்டாம்.சமீப காலமாக தமிழ்நாட்டில் அவதூறாக பேசும் ஆபாச நதி ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொருத்தர் வீட்டிலும் பெண்கள் உள்ளதை நினைவில் வைத்து கொண்டு பேச வேண்டும். அரசியல் ரீதியாக எப்படி வேண்டுமானலும் பேசலாம் தவறில்லை. மேலும் , பெண்கள் பற்றி அவதூறாக பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்,சட்டமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில், பெண்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் மற்றும் பொதுவெளிகளில் தவறான தகவல்களையோ அல்லது செய்திகளையோ பரப்புவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்ற முடிவை ஒரு பெண் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் வரவேற்பதாகத் தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான கொச்சையான கருத்துகள் சமூக சமூக ஊடகங்களில் பகிரப்படுவதைச் சுட்டிக்காட்டிய உறுப்பினர், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிலரும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்ச்சாட்டினார். அவர்கள் மீது முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

உடனே இதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சார் சி.டி.ஆர். நிர்மல்குமார், பெண்கள் குறித்து யார் அவதூறாகப் பேசினாலும் அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். திமுகவினர் போல போலி கணக்குகளை (Fake IDs) உருவாக்கி, எங்கள் கட்சியின் பெயரில் அவதூறு பரப்பும் வேலைகளில் சிலர் ஈடுபடுகின்றனர். அத்தகைய போலி கணக்குகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை ஆனந்த் எங்கள் கட்சியைச் சேர்ந்த யாரேனும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று விளக்கமளித்தார். அமைச்சர்களின் பதிலுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் சமூக ஊடகங்களில் தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தும் பட்சத்தில், அதை அனைத்துப் பெண்களின் சார்பாகவும் வரவேற்பதாகக் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.