சென்னை: “முதலமைச்சர் பேசி முடித்ததும் வாய்ப்பு தருவதாக சொன்ன பேரவைத் தலைவர் ஏதோ துண்டு சீட்டை பார்த்ததும் வாய்ப்பு தர மறுத்துவிட்டார்.
திடீரென்று, “இல்லை, இல்லை.. அனுமதிக்க முடியாது.” என்று சொல்லிவிட்டார்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் பதில் அளித்தார். அப்போது திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் முதல்வர் விஜய். இதற்கு பதிலளிக்க திமுக எம்.எல்.ஏக்கள் வாய்ப்பு கேட்டனர். அதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அனுமதி மறுத்தார். இதனால் சபாநாயகர் இருக்கையை திமுக எம்.எல்.ஏக்கள் முற்றுகையிட்டனர்.
பின்னர் திமுக எம்.எல்.ஏக்களுக்கு பேச வாய்ப்பு தரப்படும் எனக் கூறியிருந்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் திடீரென அனுமதி மறுத்தார். இதனைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலை
மையில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதைத்தொடர்ந்து, தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த வியாழக்கிழமையன்று காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில், எதிர்க்கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக நான் உரையாற்றியிருந்தேன்.
கிட்டத்தட்ட 35 முதல் 45 நிமிடங்கள் பேசியிருந்தேன். பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருந்தேன். இந்த ஆட்சியில் என்னென்ன நடந்திருக்கிறது, இந்த 114 நாட்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குச் சீரழிந்து போயிருக்கிறது என்பதை மிகத் தெளிவாக, விளக்கமாக, ஆதாரங்களோடு பேசியிருந்தேன்.
அரசுக்கு 15 கேள்விகள் வைத்திருந்தேன். குறிப்பாக முதலமைச்சரிடம் நேரடியாகக் கேள்விகள் கேட்டேன். “இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள். டைவர்ஷன் பண்ணாமல், டைவர்ஷன் டாக்டிக்ஸாக இல்லாமல், நேரடியாக நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்” என்று கேட்டேன்.
இன்றைக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசினார். அதில் முதல் 10 முதல் 15 நிமிடங்கள், காவல்துறையின் சார்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம், ஆன்லைன் மோசடி சம்பந்தமாக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு வந்தார். நாங்கள் எல்லாம் அமைதியாக உட்கார்ந்து அதையெல்லாம் கேட்டுக்கொண்டி
ருந்தோம். ஆனால் 15-வது நிமிடத்திற்குப் பிறகு, எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வைக்க ஆரம்பித்தார்.
நான் வியாழக்கிழமை பேசும்போதே, “நீங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள் என்பதை நம்புங்கள். இப்போது திமுக ஆட்சியில் இல்லை என்பதை நீங்கள் நம்ப வேண்டும். உங்களுடைய ஆட்சி அமைந்துவிட்டது என்பதை தயவுசெய்து நம்புங்கள். இன்னும் எங்கள் மேலேயே பழி போடாமல், இந்த மூன்று மாதங்களில் என்னென்ன செய்திருக்கிறீர்கள், அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைப் பதில் சொல்லுங்கள்” என்று சொல்லியிருந்தேன்.
ஆனால் மீண்டும் திமுக ஆட்சியே நடக்கிறது என்ற நினைப்பில் முதலமைச்சர் அவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்தார். சில கட்சிக் கூட்டங்களில் எங்களுடைய உறுப்பினர்கள் வெளியில் பேசியதையும், இந்த அரசு மீது வைத்த விமர்சனங்களையும் உள்ளே கொண்டுவந்து பேசி, அதையெல்லாம் அவைக் குறிப்பில் பதிவேற்றச் செய்ய ஆரம்பித்தார்.
உடனே நானும் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து சபாநாயகரிடம், “முதலமைச்சர் வெளியில் பேசுவதைப் பற்றி இங்கே பேசுகிறார். எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டும்” என்று கேட்டோம். ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சர் பல தவறான குற்றச்சாட்டுகளை, பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்துக்கொண்டே இருந்தார். எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் எங்களுக்குப் பதில் சொல்வதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. முதலமைச்சர் பேசி முடித்த உடனே நாங்கள் அனைவரும் மீண்டும் எழுந்து, “எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். எங்களைப் பற்றிக் குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறார்” என்று கேட்டோம். ஆனால் அதற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
“முடியவே முடியாது”.. திமுகவினர் பேச வாய்ப்பு தருமாறு முதல்வர் விஜய் கூறியும் அனுமதி மறுத்த சபாநாயகர்
முதலில் “எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் வாய்ப்பு கொடுக்கிறேன்” என்று சபாநாயகர் சொன்னார். ஆனால் என்ன அழுத்தம் வந்தது என்று தெரியவில்லை. முதலமைச்சர் சொன்ன
தாலா, அமைச்சர் பெரு
மக்கள் யாராவது சொன்னார்களா, அரசு அதிகாரிகள் சொன்னார்களா என்று தெரியவில்லை.
முதலமைச்சர் பேசி முடித்ததும் வாய்ப்பு தருவதாக சொன்ன பேரவைத் தலைவர் ஏதோ துண்டு சீட்டை பார்த்ததும் வாய்ப்பு தர மறுத்துவிட்டார். திடீரென்று, “இல்லை, இல்லை.. அனுமதிக்க முடியாது.” என்று சொல்லிவிட்டார். “தவெக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கும் முழுக்க முழுக்க ஜால்ரா அடித்துள்ளார் பேரவைத் தலைவர்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.