புதுக்கோட்டை, நவ. 1:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் இயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை தொடங்கியுள்ளது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் இயற்கை விளைபொருட்களுக்கு நேரடி சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த விற்பனை நடைபெறுகிறது.
இதன்படி, உழவர் சந்தையில் தேங்காய், கவுனி அரிசி மற்றும் மிளகு உள்ளிட்ட இயற்கை வேளாண் விளைபொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தரமான பொருட்களை நேரடியாக வாங்கிப் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விற்பனை அரங்கில் விவசாயப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. நிகழ்வில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை சார்ந்தவர்கள் பங்கேற்றனர்.
தொடர்புக்கு: 78679 45123