தமிழ்நாடு பத்திர பதிவு துறை ஆனது 150 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏறத்தாழ 595 சார் பதிவாளர் அலுவலகங்களில் 35 லட்சத்து 47 ஆயிரத்து 455ஆவணங்கள் நாள் ஒன்றுக்கு பதிவு செய்யப்படுகிறது. அதில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 157 திருமண பதிவுகள் ஆகும். இதில் கிறிஸ்தவ திருமண சட்டத்தின் படி 13 ஆயிரத்து 153 பதிவுகள் நடைபெறுகிறது. இப்படி எட்டரை கோடி மக்களின் வாழ்வாதாரத்தை காத்து நிற்கின்ற பத்திரப்பதிவு துறையை இ டெண்டர் மூலமாக முற்றிலும் தனியார்மயமாக்கி அரசின் கொள்கை முடிவு என்று அப்பட்டமான சர்வாதிகாரப் கோக்கோடு தனிமனித உரிமையை பறிக்கின்ற விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு செயல்படுவதற்கு உரிமம் பெற்ற 5500 ஆவண எழுத்தர்கள் தமது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். எந்த ஒரு கருத்துருவும் கேட்கப்படாமல் கருத்து கேட்பு கூட்டமும் நடத்திடாமல் முழுவதுமாக தனியார் மயமாக்குவது என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு சமமாகும். சினிமா கவர்ச்சியின் மூலம் பெறப்பட்ட வாக்கின் மூலமாக ஆட்சிக்கு வந்துள்ள முதல்வர் விஜய் சற்றும் சிந்திக்காமல் மக்களின் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் 3.0 திட்டத்தின் முன்னெடுப்பு என்று கூறி ஏன் முழு துறையையும் தனியாருக்கு தாரை பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தத் திட்டத்தின் சாதக பாகங்களை ஆராயாமல் இதனால் அரசின் முக்கிய ஆவணங்களுக்கும் சொத்துக்களுக்கும் கடுமையான பாதிப்புகளும் மோசடிகளுக்கும் வலிகளுக்கும் என்பதை கூட கருத்தில் கொள்ளாமல் இதனை நிறைவேற்ற துடிப்பது ஜனநாயக அணுகுமுறை அல்ல. அரசின் இந்த புதிய தனியார் தாரை வார்ப்பினால் காகிதம் இல்லா ஆவணப்பதிவில் பாகம் கொண்டு செல்லும் சிரமம் உள்ளது மேலும் வெளியூரில் உள்ள இந்தியர்களின் சொத்துக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது தனியார் தனக்கு தேவையான தனியார் தனக்கு தேவையான கனிம வளங்கள் நிறைந்த இடங்களை போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க வாய்ப்பு உள்ளது மேலும் அரசு நிலமாக உள்ள அனைத்தையும் தனியார் போலியான ஆவணங்கள் தயார் செய்து அபகரிக்க வாய்ப்பு உள்ளது. தனியார் துறையே தங்களிடம் உள்ள கோப்புகளை வைத்து ஆள் மாறாட்ட மோசடிகளுக்கு இந்த புதிய முறை வழிவகுக்கும் சார்பதிவாளர்கள் பொம்மைகளாக மாற்றப்பட்டு தனியாக எங்கிருந்தோ ஒருவர் அவர்கள் இயக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் பத்திரப்பதிவுத்துறையில் முழு அனுபவம் பெற்ற 5500 ஆவண எழுத்தர்கள் தொடர்புடைய ஐம்பது லட்சம் குடும்பங்களில் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற நிலையை முதல்வர் நேரடியாக தலையிட்டு தடுத்திட வேண்டும்.


தமிழகப் பதிவுத்துறையில் ஆவணப் பதிவு நடைமுறைகளை நவீனப்படுத்தும் நோக்கில் PAPER LESS, PRESENT LESS மற்றும் MRH உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அரசின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், பொதுமக்களின் சொத்துப் பாதுகாப்பு, ஆவணங்களின் நம்பகத்தன்மை மற்றும் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களின் வாழ்வாதாரம் ஆகியவை தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.


மேலும், தமிழகத்தில் சுமார் 8.5 கோடி மக்களின் சொத்துரிமை மற்றும் சொத்து ஆவணங்களின் உண்மைத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர வேண்டும்.


தற்போதைய நடைமுறையில் ஒரு பத்திரத்தைத் தயாரிப்பது என்பது சாதாரணமான பணியல்ல. ஆவணத்தில் இடம்பெற்றுள்ள விவரங்கள், முன் ஆவணங்கள், சொத்தின் உரிமை வரலாறு, வில்லங்கச் சான்றுகள், வருவாய்த்துறை ஆவணங்கள், சர்வே எண்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே பத்திரம் தயாரிக்கப்படுகிறது.


பத்திரத்தின் முதல் பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை ஒவ்வொரு விவரமும் சரிபார்க்கப்பட்டு, எழுத்துப்பிழைகள் மற்றும் ஆவணக் குறைபாடுகள் இல்லாத வகையில் தயாரிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே பதிவு அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.


இதற்காக ஒரு சாதாரண ஆவணத்திற்குக்கூட குறைந்தபட்சம் மூன்று நாட்கள் முதல் அதிகபட்சம் ஒரு வாரம் வரை தேவைப்படுவதாகவும், சிக்கலான சொத்து ஆவணங்களை முழுமையாகத் தயாரித்து ஆய்வு செய்து பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் வரை ஆகும் .ஆனால், பொதுமக்கள் அலுவலகத்திற்குச் சென்றவுடன் உடனடியாகப் பதிவு முடிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பை MRH போன்ற புதிய திட்டங்கள் உருவாக்குகின்றனவா? ஆவணங்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்காமல் விரைவாகப் பதிவு செய்வது சாத்தியமா? என்ற கேள்விகள் எழுகிறது.


ஏற்கெனவே நடைமுறையில் உள்ள PRESENT LESS திட்டத்தில் முதல் ஆவணம் மதிப்பு நிர்ணயத்திற்காக நிலுவையில் வைக்கப்பட்டு, மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் ஏற்படும் குறைவு அல்லது கூடுதல் தொகையைச் செலுத்தி ரசீது மட்டுமே பெற முடிகிறது.


அந்த ரசீதை சம்பந்தப்பட்ட ஆவணத்துடன் இணையவழியில் இணைப்பதில் சிக்கல் உள்ளது.


மேலும், வருவாய்த்துறை தொடர்பான பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் வாங்குபவர்கள் வெளிநாடு சென்றுவிட்டால், பின்னர் பதிவுத்துறை அலுவலகத்தில் ஆவணக் குறைபாடு இருப்பதாகக் கூறித் திருப்பி அனுப்பும்போது, அவர்களிடமிருந்து மீண்டும் புகைப்படம் மற்றும் கைரேகை பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.


ஒரு முறை புகைப்படம் மற்றும் கைரேகை பெறும் நடைமுறையில், ஆவணம் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு அதை எவ்வாறு மீண்டும் சரிசெய்வது? வெளிநாட்டில் வசிக்கும் ஆவணதாரர்களின் ஒப்புதல் மற்றும் அடையாளச் சரிபார்ப்பை எவ்வாறு மேற்கொள்வது? என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.


பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகைப்படங்கள் மற்றும் கைரேகை உள்ளிட்ட விவரங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றும் பணிகள் தொடர்பாக TCS நிறுவனத்தின் பங்களிப்பு குறித்தும் கேள்வி எழுகிறது.


பொதுமக்களின் சொத்துரிமை தொடர்பான ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட அடையாள விவரங்கள் தனியார் நிறுவனங்களின் தொழில்நுட்பக் கட்டமைப்பில் கையாளப்படும்போது, அவற்றின் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படும்?


அரசு அலுவலகத்திலேயே தற்போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தனியார் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டால் அவற்றை எவ்வாறு சரிசெய்வார்கள் என்றும் மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளார்.



அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பதிவுத்துறையிலேயே ஒரு குறையை நிவர்த்தி செய்ய சுமார் ஒரு மாத காலம் ஆகும் நிலையில், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் இத்தகைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்படும் என்றும் கேள்வி எழுகிறது.



ஆவண எழுத்தர்கள் என்பவர்கள் வெறுமனே கணினியில் விவரங்களைத் தட்டச்சு செய்பவர்கள் அல்ல. சொத்தின் உரிமை வரலாற்றை ஆய்வு செய்தல், முன் ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்த்தல், வில்லங்கச் சான்றுகளைச் சரிபார்த்தல், வருவாய்த்துறை ஆவணங்களை ஆய்வு செய்தல், சட்ட விதிகளுக்கு உட்பட்டு பத்திரங்களைத் தயாரித்தல் போன்ற பொறுப்புகளை மேற்கொள்கின்றனர்.


ஒரு பத்திரத்தைத் தயாரிப்பதற்கு மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரையிலும், சிக்கலான ஆவணங்களுக்கு 30 நாட்கள் வரையிலும் தேவைப்படும் சூழலில், அந்தப் பணிகளை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் தொழில்நுட்ப வசதிகளை மட்டும் கொண்டு ஆவணங்களைத் தயாரிக்க முடியுமா?


புதிய திட்டங்களால் ஆவண எழுத்தர்களின் தொழில் வாய்ப்புகள் குறைந்தால், அவர்களைச் சார்ந்து வாழும் சுமார் 50 லட்சம் குடும்பங்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படக்கூடும்.


பதிவுத்துறையில் PAPER LESS திட்டத்தின் கீழ் செட்டில்மெண்ட் ஆவணம், விற்பனை ஆவணம், பாகப்பிரிவினை ஆவணம், குடும்ப தான செட்டில்மெண்ட் ஆவணம், ரிவோகேஷன் செட்டில்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைப் பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது.

குறிப்பாக, இரண்டு தலைமுறைகளாகப் பாகப்பிரிவினை செய்யப்படாமல் இருக்கும் குடும்பச் சொத்துகளை தற்போது பிரித்துப் பதிவு செய்யும்போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.


ஒரே பாகப்பிரிவினை ஆவணத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சொத்துகள் இருக்கலாம். அத்தகைய சொத்துகளுக்குத் தனித்தனியாக வில்லங்கச் சான்றுகள், அங்கல் பதிவுகள், கிராம நிர்வாக அலுவலர் சான்றுகள், GPS புகைப்படங்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டியிருக்கும்.


சில பாகப்பிரிவினை ஆவணங்களில் 100-க்கும் மேற்பட்ட சொத்துகள் இடம்பெற்று, ஒவ்வொரு சொத்துக்கும் தனித்தனி சர்வே எண்கள் இருக்கக்கூடும்.


இத்தகைய ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்து தயாரிப்பதற்கு அனுபவமும் சட்ட அறிவும் தேவை. எனவே, குறைந்த பக்கங்கள் கொண்ட ஆவணங்களைப் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பதிவு செய்யவும், ஆவணங்களின் தன்மைக்கு ஏற்ப நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


அரசாணை உள்ளது என்ற காரணத்தைக் கூறி அனைத்து ஆவணங்களுக்கும் ஒரே மாதிரியான நடைமுறையைக் கட்டாயப்படுத்தக் கூடாது



தமிழகத்தில் சுமார் 8.5 கோடி மக்கள் வசித்து வரும் நிலையில், அவர்களின் சொத்துகளின் உரிமை மற்றும் பதிவுகளில் உள்ள உண்மைத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும்.


MRH திட்டத்தின் கீழ் அலுவலகத்திற்கு நேரில் சென்றவுடன் பதிவு முடியும் என்ற நடைமுறை உருவாக்கப்பட்டால், ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகள் குறையக்கூடும் , இதனால் பொதுமக்களின் சொத்துரிமைக்கு பாதிப்பு ஏற்படலாம்.




அரசு நிலங்கள் மற்றும் ஏற்கெனவே சொத்துத் தொடர்பான பிரச்சினைகள் உள்ள நிலங்களிலும் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அபகரிப்பு முயற்சிகள் நடைபெறக்கூடும்கடனில் மூழ்கிய நிறுவனங்கள் மற்றும் அரசு செயல்படுத்த முடியாத நிறுவனங்களை டெண்டர் மூலம் தனியார் நிறுவனங்கள் எடுத்துச் செயல்படுத்தும் நடைமுறையைப் போல, பதிவுத்துறையின் முக்கியப் பணிகளையும் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. .


பணபலம் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனிநபர்களை மிரட்டி ஆவணங்களை எழுதிவாங்கக்கூடிய சூழலும் உருவாகலாம்

மேலும், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் பணிகளுக்கு யார் பொறுப்பு? ஆவணங்களில் தவறுகள் ஏற்பட்டால் பொதுமக்கள் யாரிடம் முறையிட வேண்டும்? சொத்துகள் அபகரிக்கப்பட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள்?



தனியாரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே உள்ள பதிவுத்துறை அலுவலகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தேவையான கணினி வசதிகள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசே உருவாக்க வேண்டும்.


MRH திட்டத்தையும் அரசே ஏற்று நடத்தலாம் என்றும், பொதுமக்களின் சொத்துரிமையைப் பாதுகாப்பதில் அரசின் நேரடிக் கட்டுப்பாடு தொடர வேண்டும் . பதிவுத்துறையில் இடைத்தரகர்களின் தலையீட்டை ஒழிக்க வேண்டும்; அதற்காக பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது. தனிநபர்களின் சொத்துரிமையைப் பாதுகாக்கும் வகையில் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் பதிவுத்துறை செயல்பட வேண்டும். ஏற்கெனவே உள்ள பதிவுத்துறை அலுவலகங்களின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

. பொதுமக்களின் சொத்து ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

PAPER LESS 2.0 மற்றும் 3.0 திட்டங்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை முதலில் சரிசெய்ய வேண்டும்.

MRH திட்டத்தை அரசே ஏற்று நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்க வேண்டும். வெளியூரிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களின் சொத்துகளுக்குப் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

உரிமம் பெற்ற 5,500 ஆவண எழுத்தர்களின் தொழில் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். செட்டில்மெண்ட், விற்பனை, பாகப்பிரிவினை உள்ளிட்ட அனைத்து வகையான ஆவணங்களுக்கும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களிடம் ஆவணப் பாதுகாப்பு மற்றும் பதிவு தொடர்பான முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்கும் முன்பு பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும்.



மக்கள் நலன் சார்ந்த இந்த கோரிக்கைகளை கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் இதற்காக குரல் கொடுக்க வேண்டும் இதனால் ஏற்படும் பாதிப்புகளை அரசின் கவனத்திற்கு ஜனநாயகத்தின் நான்காம் தூணாக திகழக்கூடிய பத்திரிகைகள் எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ள மதுரை மாவட்ட பத்திர எழுத்தாளர்கள் சங்க தலைவர் ராஜமாணிக்கம் இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை வருகிற நவம்பர் 2ஆம் தேதி முதல் மேலூர் பேருந்து நிலையம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்திட உள்ளதாக எச்சரித்துள்ளார்.



ஏற்கனவே அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைமுறை கூடிய அரசு பணிகளுக்கான தேர்வை புறக்கணிக்கின்ற விதமாக அவுட்சோர்சிங் முறையை கொண்டு வந்து அரசாணை நிறைவேற்றி உள்ள பொறுப்பற்ற தமிழ்நாடு அரசு கனிம வளத்தை முற்றிலுமாக அழிக்கின்ற வகையில் 2500 ரூபாய் கோடி வரையில் அதனை வணிகமயமாக்கும் முயற்சியில் இருக்கின்றது இதனால் தற்போது உள்ள அரசு ஊழியர்களே அரசு ஊழியர்களின் கடைசி தலைமுறையாக இருக்கக்கூடிய அபாயம் நிலவுகிறது இதனை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும். தமிழ்நாடு அரசு துறைகளில் மிக முக்கியமான துறையாக செயல்படக்கூடிய பத்திரப்பதிவுத்துறை முடங்கி விடக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார்.