மதுரை, அக். 21:


மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், பதினெட்டாங்குடி கிராமத்தில், “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.10.2026) ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது, VB-G RAM G திட்டத்தின் கீழ், அரசு தரிசு நிலங்களில் முறையே ரூ.12.83 லட்சம் மற்றும் ரூ.10.08 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு கண்மாய்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


புதிதாக உருவாக்கப்படும் இந்தக் கண்மாய்கள், கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும், விவசாயப் பணிகளுக்குத் தேவையான நீரை வழங்குவதிலும், கால்நடைகளின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது.


எனவே, இக்கண்மாய்கள் அமைக்கும் பணிகளைத் தரமாகவும், உரிய காலத்திற்குள்ளும் நிறைவேற்றிட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். மேலும், இந்நீர்நிலைகள் ஒட்டுமொத்த கிராம மக்களின் நலனுக்கும், விவசாயம் மற்றும் கால்நடைகளின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


கிராமப்புறங்களில் நீர்வளத்தைப் பெருக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விவசாயத்திற்கும் கால்நடை வளர்ப்பிற்கும் நீண்டகாலப் பயன் அளிக்கும் வகையில் இத்தகைய நீர்நிலை மேம்பாட்டுப் பணிகளை முறையாகப் பராமரிப்பது அவசியம் என்பதையும் இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது. ஊராட்சிகள் உதவி இயக்குனர் விசாலாட்சி உதவி பொறியாளர் வினோத்குமார்

, ஊராட்சி செயலாளர்கள் பொன்னு லிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்