சென்னை: நாட்டில் அதிக சொத்துக்கள் உள்ள முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் விஜய் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

மக்​களாட்சி சீர்​திருத்​தங்​களுக்​கான அமைப்பு (ஏடிஆர்) மற்​றும் தேசிய தேர்​தல் கண்​காணிப்​பகம் ஆகியவை தேர்​தல் பிர​மாணப் பத்​திரங்​களை பகுப்​பாய்வு செய்து அறிக்கை வெளி​யிட்​டுள்​ளன. இந்த ஆய்​வின்​படி, கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் ரூ.1413.8 கோடி சொத்துக்களுடன் நாட்டின் பணக்கார முதல்வராக உள்ளார். அவரைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.931.83 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், தமிழக முதல்வர் விஜய் ரூ. 648.85 கோடியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். ஜம்​மு-​காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா ரூ.55.24 லட்​சம் மதிப்​புள்ள சொத்​துகளு​டன் நாட்​டிலேயே மிகக் குறைந்த சொத்​துடைய முதல்​வ​ராக உள்​ளார். ஆய்வு செய்​யப்​பட்ட 31 முதல்​வர்​களில் 4 பேர் (13 சதவீதம்) ரூ.100 கோடிக்​கும் அதி​க​மான சொத்​துகளைக் கொண்​டுள்​ளனர். மேலும், நாட்​டில் உள்ள 31 முதல்​வர்​களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.118.07 கோடி​யாக உள்​ளது.