சென்னை: மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி நாளை சென்னை வருகிறார்.

ஒரு நாள் பயணமாக, டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், பின்னர் கார் மூலமாக மாமல்லபுரம் செல்கிறார். அங்கு நடக்கும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் பங்கேற்கிறார். இந்த பயணத்தின் போது அவர் தமிழக முதல்வர் விஜய்யை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், ராகுல் காந்தி மாமல்லபுரத்தில் நடைபெறும் கட்சியின் நிர்வாகிகள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்க வருகிறார் என்று தெரிவித்தார். இதன் காரணமாக அவர் முதல்வர் விஜய்யை சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.