சென்னை: தமிழக முதல்வர் விஜய்யின் அலுவலக அறை பாரம்பரிய கட்டிடத்தில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு இடம் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டிடத்தில் முதல்வர் விஜய்யின் அலுவலக அறை செயல்பட்டு வருகிறது. இதனிடையே, இடநெருக்கடி காரணமாக அவரது அறை அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 வது மாடிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. அவருடன் முதல்வரின் 4 செயலாளர்கள் அறையும் 10-வது மாடிக்கு இடம்பெயர்கிறது. இதற்காக 10-வது தளத்தில் உள்ள மாநாட்டு அறை மற்றும் உணவகம் ஆகியவற்றை முதல்வரின் அறையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஏற்கனவே இயங்கி வந்த தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, வணிகவரித்துறையின் சில பிரிவுகள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த இடமாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.