சென்னை, செப். -
பேரவையில் பேசிய திமுக மூத்த சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கிராமப் பகுதியில் பாம்பு கடித்து உயிரிழப்பு என கேள்விப்பட்டிருக்கோம்.
ஆனால், தற்போது நகரப் பகுதிகளிலும் பாம்பு கடித்து உயிரிழப்பு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு மாணவி பாம்பு கடி காரணமாக இறந்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். போதுமான அளவு பாம்புக்கடி மருந்துகள் இருக்கின்றதா.! சில மருந்துகள் காலாவதியாகி இருக்க கூடும், இதையெல்லாம் அரசு கவனிக்கின்றதா என கேள்வி எழுப்பினார். இந்த ஆண்டு பாம்புக்கடியால் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு எனவும் கேட்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அருண்ராஜ், இந்த ஆண்டு இதுநாள் வரை 9,519 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்று ஆண்டு 15,837 பாம்புகடி சம்பவங்கள் பதிவாகின, இதில் 26 பேர் இறந்துள்ளனர் என்றார்.