மதுரை, செப்.3-
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம்.
மதுரை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், தலைமையில் நடை
பெற்றது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கும்பாபிஷேகம்
ஆணையாளர் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தெரிவிக்கையில்...,” அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைபுரிந்து தரிசனம் மேற்கொள்வா
ர்கள்.
கடைகள் மற்றும் உணவகங்களை ஆய்வு செய்து அவற்றை அனுமதிக்கப்பட்ட இடத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவற்றை முறையாக பராமரித்திடவும், பழுதடைந்த சாலைகளை மராமத்து செய்திடவும், பக்தர்கள் வாகனம் நிறுத்துமிடம், தெரு விளக்குகளின் நிலைகுறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த தெருவிளக்குகளை சரிசெய்திட வேண்டுமென தெரிவித்ததுடன், திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் உணவகங்களை ஆய்வு செய்து அவற்றை அனுமதிக்கப்பட்ட இடத்தில் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சக்திவேல், துணை ஆணையாளர்கள் ஜெய்னுலாப்தீன் அவர்கள், ராஜாராம், தலைமை பொறியாளர் ராமசாமி, காவல்துறை துணை ஆணையாளர்கள் வனிதா, இனிகோ திவ்யன் அவர்கள், நகர்நல அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி அவர்கள், உதவி நகர்நல அலுவலர் அபிஷேக் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர்.