தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா என்பவரை திமுக தலைவர்மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தளவாய்ப்பட்டினம் ஊராட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். சுகன்யா, நீண்டகால திராவிட பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். கழக மகளிர் அணியில் தொடர்ந்து பணியாற்றி வரும் இவர், கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது கணவர் தாராபுரம் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், இவரது குடும்பத்தினர் பல்வேறு காலகட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகள் வகித்து, பொதுப்பணியில் அனுபவம் பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் எஸ். சுகன்யாவுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.