தமிழக வரு​வாய்த்​துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்டை யன் சென்​னையி​லிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்​தார். விமான நிலை​யத்​தி்ல் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

தமிழ்​நாட்​டில் இருந்து அண்டை மாநிலங்​களுக்கு ஜல்​லி, மணல் உள்​ளிட்ட கனிம வளங்​கள் கடத்​தப்​படு​வதைத் தடுப்​ப​தற்​காக 20 நாட்​களுக்கு முன்​பாகவே அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை விரை​வில் எடுக்​கப்​படும். மலை அடி​வாரங்​களில் இருந்து கற்​கள் வெட்டி எடுக்​கப்​பட்​ட​போது என்​னென்ன வரி​கள் கட்​டப்​பட்டு உள்ளன என்​பது குறித்து ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்​படும்.

தவெகவை விலைக்கு வாங்​கி​விட முடி​யாதா என்று சட்​டப்​பேர​வை​யில் பழனி​சாமி பேசி​யது குறித்​து கேட்​கிறீர்​கள். திமுக​வுடன் இணைந்து அதி​முக ஆட்சி அமைக்​கலாம் என நினைத்​த​போது தான் இந்​நிலைமை ஏற்​பட்​டுள்​ளது.

அவைக்​குறிப்​பில் நீக்​கப்​பட்ட வார்த்​தைகள், சமூக வலை​தளங்​களில் பரவி வருவது தொடர்​பாக செய்​தித்​துறை அமைச்​சர் நடவடிக்கை மேற்கொண்டுள் ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.