ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டம், சிலகலூரிபேட்டையில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டு, தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது விஜயவாடாவில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற பஸ் ஆட்டோ மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆட்டோவில் பயணித்த 15 பேரில் ஏழு பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் பாபு (62), மனேம்மா (55), சம்பூர்ணம்மா (70), லக்ஷ்மம்மா (75), கங்கம்மா (50), சுவர்தா (45), மரியம்மா (45) என அடையாளம் காணப்பட்டனர்.

மேலும், நான்கு குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பலத்த காயங்களுடன் தப்பினர். காயமடைந்த இவர்கள் குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது.