மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள பி.ஆகாஷ் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அவர், 2013-இல் யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 63 வது இடம் பிடித்தார். அதிலும் வெறும் 22 ஆவது வயதிலேயே அவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார். ஐஐடி சென்னையில் பயின்றவர் . யுபிஎஸ்சி-இல் கணிதத்தை விருப்ப படமாக தேர்வு செய்தார். ஆங்கில வழியில் தேர்வு எழுதினார். 10-ஆம் பொது தேர்வில் 95 சதவீத மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பில் 96 சதவீத மதிப்பெண்களும் பெற்றார். மதுரைக்கு வருவதற்கு முன்பு, நாகப்பட்டினம் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். மேலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் துணைச் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.சவால்கள் நிறைந்த மதுரை ஆட்சியர் பணியில் அவர் சாதிக்க ஜூனியர் ரிப்போர்ட்டர் வாழ்த்துகிறது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக திரு. ப. ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.06.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக தர்மபுரி மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் கோட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி கோட்டத்தின் சார் ஆட்சியராகவும், பெருநகர் சென்னை மாநகராட்சியில் வட்ட துணை ஆணையராகவும், சென்னை (வடக்கு) குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தின் செயல் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவராகவும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளராகவும், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் செயல் இயக்குநராகவும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது மதுரை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.