மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 13ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.இதில் பணியாற்றி வரும் உதவி பொறியாளர்கள்,ஓவர்சீயர்கள்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெரும்பாலானோர் பலரும் கடந்த 2019 ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது தேர்தல் கமிஷன் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.மீண்டும் தேர்தலுக்கு பிறகு தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஏற்கனவே பணியாற்றிய இடத்தில் பணிக்கு வந்த அவர்கள்,குறு நில மன்னர்கள் போல பல்வேறு திட்டப்பணிகளில் கோலோச்ச தொடங்கினர்.இந்த நிலையில் இது தொடர்பான புகார்கள் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ஆட்சி மேலிடத்திற்கு செல்ல உடனடியாக 2026. தேர்தல் பணிகளை காரணம் காட்டி 33.துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதனை தொடர்ந்து உதவி பொறியாளர்கள்,ஓவர்சீயர்கள் மாற்றப்பட்டனர்.தற்போது தேர்தல் முடிவுகளுக்கு பிறகு த வெ க ஆட்சியில் மீண்டும் பழைய இடத்திலேயே பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தமக்கு தெரிந்த உள்ளூர் அமைச்சர்கள்,எம் எல் ஏ க்கள்,கட்சி நிர்வாகிகள் மூலம் காய் நகர்த்தி வருகின்றனர்.மீண்டும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய இடத்திலேயே பணியாற்றினால் பல்வேறு முறைகேடுகளுக்கு அது வழி வகுக்கும்.மேலும் ஏற்கனவே நடைபெற்ற அன்&கோ வேலைகள் தொடர வாய்ப்புள்ளது.எனவே இந்த விவகாரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தலையிட்டு மன்னராட்சி தலை தூக்கிடாமல் மக்களாட்சி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையில் மீண்டும் ஏற்கனவே பணியாற்றிய இடத்திற்கு வர துடிக்கும் உதவி பொறியாளர்கள்,ஓவர்சீயர்கள்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்:கடிவாளம் போடுவாரா அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்
June 03, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
மதுரை மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக வெற்றி வேந்தன் இன்று பொறுப்பேற்றார்
தமிழகம்
June 17, 2026