நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள தாய் கிழவி படத்தின் சிறப்புக் காட்சி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் தாய் கிழவி எனும் படத்தில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப்படத்தில் வட்டிக்கு விடும் பவுன் தாய் எனும் கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருந்த டீசர் வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படம் முதலில் கடந்த 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டடு பின்னர், இன்று 27-ம் தேதி வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தக் காட்சிக்கு நடிகைகள் ஷாலினி, ஜோதிகா, நடிகர் சூர்யா சென்றிருந்தனர்.