ஜமா பாரி இளவழகன் இயக்​கி, நடிக்​கும் படத்​துக்கு அன்பே டயானா என்று தலைப்பு வைக்கப்பட்​டுள்​ளது. இதில் ரம்யா ரங்கநாதன் நாயகி​யாக நடித்​துள்​ளார். ரோஜா, சேத்​தன், பரிதாபங்கள் கோபி, இஸ்​மத் பானு உள்ளிட்​டோர் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடித்துள்ளனர்.

பரத் சங்​கர் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். நியோ கேசில் கிரியேஷ்ன்​ஸின் சத்யா கரி​காலன், மில்​லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவ​ராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்​ளனர். இப்​படத்​தின் முதல் தோற்​றத்தை இசை அமைப்​பாளர் அனிருத் வெளி​யிட்​டார்.