திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இருக்கும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பா.ம.க.வின் ராமதாஸ் தரப்பு இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.

இந்நிலையில் தைலாபுரத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ராமதாஸ் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கூட்டணி குறித்து இன்றே முடிவு செய்ய முடியாது. ஏனென்றால் அதற்கான களம் சரியாக அமையவில்லை. அதனால் நேரம் வரும் போது கூட்டணி குறித்து அறிவிப்பேன். நமக்கான தேர்தல் வாகனம் தயாராகி விட்டது. வருகிற பிப். 28-ம் தேதி கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறினார்.