மதுரை, செப்.3-
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பி
தழில் அறங்காவலர் குழுவின் பெயர்கள் இடம்பெறாததற்கு அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் போட்ட மறைமுக உத்தரவே காரணமாக சொல்லப்படு
கிறது.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி அறங்காவலர் குழுவின் தலைவராக இருப்பதால் தான், சிடிஆர் நிர்மல்குமார் இப்படியான உத்தரவை போட்டதாகவும் கூறப்படுகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறுகிறது. 17 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கும்பாபிஷேகம் என்பதால், உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உறுதி செய்வதில் மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளது.
அதேபோல் எல்இடி திரைகள், பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பத்திரிகை வெளியிடப்பட்டது. அந்த பத்திரிக்கையால் பல்வேறு சர்ச்சைகள் தொடங்கி
யுள்ளன. அதில் சமஸ்கிருத அர்ச்சர்கர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால் தமிழ் ஓதுவார் ஒருவரின் பெயர் கூட இடம்பெறவில்லை.
அதுமட்டுமல்லாமல் கோயிலின் அறங்காவலர் குழுவின் பெயர்களை அழைப்பதழில் போட
வில்லை. மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி இருக்கிறார். இதன் காரணமாகவே அறங்காவலர் குழுவின் பெயர்களை கும்பாபிஷேக பத்திரிக்கையில் போடவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இதன் பின்னணியில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் இருப்பதாக சொல்லப்படுகிறது. திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட அறங்காவலர் குழு என்பதால், அவர்கள் பெயர்கள் எந்தக் காரணம் கொண்டு பத்திரிக்கையில் வந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்துள்ளார். இதன் காரணமாகவே செய்தியாளர்களை சந்தித்து, திமுக நிர்வாகிகளுக்கு அறங்காவலர் குழுவில் என்ன வேலை என்று கேட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் அறங்காவலர் குழுவை கலைத்துவிட்டு தன்னுடைய ஆதரவாளர்களை அறங்காவலர் குழுவில் இடம்பெற வைப்பதற்கான பணிகளையும் சிடிஆர் நிர்மல்குமார் தொடங்கியுள்ளதாக பேச்சுகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே கும்பாபிஷேக விஷயத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் சூழலில், சிடிஆர் நிர்மல்குமார் தனியாக சர்ச்சைகளை செய்வது விவாதமாகி இருக்கிறது.