மதுரை, செப்.3-
மதுரை மாநகராட்சியில் குப்பையை 4 வகையாக பிரித்து சேகரிக்கும் நடைமுறை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கமிஷனர் கவுரவ்குமார் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்படி வீடுகளில் சேரும் ஈரக்கழிவு, உலர் கழிவு, சுகாதாரக்கழிவு, சிறப்பு கவனிப்பு கழிவு ஆகியவற்றை தரம் பிரித்து சேகரிக்க மாநகராட்சி சார்பில் சிறிய வகை கலர் தொட்டிகள் வழங்கப்பட்டது. சிறப்பாக தரம் பிரித்து வழங்கும் வீடுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணைமேயர் நாகராஜன், துணை கமிஷனர் ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.