ஆம்ஸ்டெல்வீன்: உலக கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி டி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதனிடையே இந்திய ஆடவர் அணி தனது முதல் போட்டியில் வேல்ஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தநிலையில், ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்று போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் இங்கிலாந்து வீரர்கள் இந்திய வீரர்களை சிறப்பாக கையாண்டனர். இதையடுத்து முதல் பாதியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர். எனினும் இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியினர் அடுத்தடுத்து கோல் அடித்தனர். போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணி தற்போது 3 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்திய அணி வருகிற 19-ம் தேதி தனது கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு எளிதில் முன்னேறலாம்.
உலக கோப்பை ஹாக்கி தொடர்: இங்கிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா
August 18, 2026
விளையாட்டு
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்
September 19, 2026
மதுரையில் பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை- கும்பல் வெறிச்செயல்
தமிழகம்