மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனியில் ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ள, மகா காளீஸ்வரர் கோவில் மிகவும் புகழ்பெற்ற ஜோதிர்லிங்கத் தலமாகும். சிவனின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இது, தெற்கு நோக்கி அமைந்துள்ள தனித்துவமான சுயம்பு மூர்த்தி ஆகும். இங்குள்ள பஸ்ம ஆரத்தி உலகப் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் நடிகை தமன்னா நேரில் சென்று தரிசனம் செய்து பஸ்ம ஆரத்தியில் பங்கேற்று தரிசனம் செய்தார். கோவிலுக்கு தமன்னா தனது நெருங்கிய தோழியும் தயாரிப்பாளருமான பிரக்யா கபூருடன் சென்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

தெய்வீக அழைப்பு வரும்போது தான் இந்த கோவிலுக்கு வர முடியும். பஸ்ம ஆரத்தியை காணும் வாய்ப்பு கிடைத்த போது மற்ற அனைவரிடமும் சேர்ந்து அத்தகைய ஒரு கூட்டு வழிபாட்டில் பங்கேற்று ஆன்மீக ஆற்றலையும் எழுச்சியையும் அனுபவித்தது உண்மையில் ஆழ்ந்த அனுபவமாக இருந்தது. வெறுமனே அங்கு அமர்ந்து அந்த சூழலை உள்வாங்கிக் கொள்வதே மகத்தான பாக்கியம் என்று தெரிவித்துள்ளார்.