தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால் இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ம் தேதி அந்நாட்டை அமெரிக்கா தாக்கியது. ஈரான் தலைநகர் டெக்ரானில் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவரது மகள், மருமகன், பேரன் உள்ளிட்டோரும் இந்த தாக்குதலில் பலியாகினர்.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் டெக்ரானில் நடத்திய வான்வழி தாக்குதலில் படுகாயமடைந்த காமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதே(79) கோமா நிலையில் இருந்த அவர் 2 நாட்களுக்கு பிறகு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை காமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட அதே ஒருங்கிணைந்த தாக்குதலில் காயமடைந்தார். அவரது வயது 78. காமேனிக்கும், மன்சூரே கொஜெஸ்தேக்கும் கடந்த 1964-ல் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. காமேனியின் படுகொலைக்கு பழி தீர்க்க இதுவரை இல்லாதவகையில் தீவிர பதிலடி தாக்குதலை தொடுப்போம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது.