அமெரிக்க தேர்தலில் ஓட்டுப்பதிவின் போது மோசடி செய்யப்பட்டது. ஓட்டுகள் திருடப்பட்டன. நமது தேர்தலை பார்த்து உலகமே சிரிப்பாய் சிரிக்கிறது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் டிரம்ப். உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டினார். வெனிசுலா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தினார். தற்போது தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர டிரம்ப் விரும்புகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமெரிக்க தேர்தலில் ஓட்டுப்பதிவின் போது மோசடிகள் செய்யப்பட்டன. ஓட்டுகள் திருடப்பட்டன. நமது தேர்தலை பார்த்து உலகமே சிரிப்பாய் சிரிக்கிறது. நாம் அவற்றை சரி செய்ய போகிறோம். இல்லையெனில் நமக்கு இனி ஒரு நாடு இருக்காது. குடியரசு கட்சியினர் அனைவரும் போராடுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்காவை காப்பாற்றுங்கள் சட்டம் அவசியம். தேர்தலில் ஓட்டெடுப்பின் போது அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். ஓட்டளிக்க அனைத்து வாக்காளர்களும் குடியுரிமை சான்றை காட்ட வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்கள், ராணுவத்தினரை தவிர மற்றவர்களுக்கு மெயிலில் இனி ஓட்டுகள் இல்லை. இவ்வாறு டிரம்ப் அதில் தெரிவித்துள்ளார்.