இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, டெல்லியில் பிரதமர் மோடியுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வந்துள்ளார். மும்பையில் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகளை மார்க் கார்னி சந்தித்தார். டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை நேற்ரு கனடா பிரதமர் சந்தித்து பேச்சு நடத்தினார்.
வர்த்தகம், எரிசக்தி, கனிமங்கள், விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறுகையில்,
பிரதமர் மார்க் கார்னியை இந்தியாவுக்கு வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமராக அவர் இந்தியாவிற்கு வருவது இது முதல் முறை. இதை நாங்கள் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதுகிறோம். கடந்த ஆண்டு கனடாவில் நடந்த ஜி 7 கூட்டத்தில் என்னையும், எனது குழுவினரையும் அவர் அன்புடன் வரவேற்றார். இன்றும் அதே அன்புடன் அவரை வரவேற்பது ஒரு பாக்கியம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.