ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் நெருக்கடி நிலை அதிகரித்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஷியா முஸ்லீம் ஜமா அத் சார்பில் அமெரிக்க தூதரகம் முற்றுகை பேரணி போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஈரான் போர் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஈரானுக்கு ஆதரவான போராட்டங்களை கண்காணிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், டி.ஜி.பி.க்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. முன்னதாக இது குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.