சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் இன்று (ஆக.21) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 17-ல் பவுனுக்கு ரூ. 400, ஆக.18-ல் பவுனுக்கு ரூ.160, ஆக.19-ல் பவுனுக்கு ரூ.880 என்று உயர்ந்த நிலையில் நேற்று (ஆக. 20) தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்தது. அதன் நீட்சியாக இன்று ஆக.21 அன்றும் பவுனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.

இந்தச் சூழலில் சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,710-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,17,680-க்கு விற்பனையாகிறது. 24 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.16,048-க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.12,490-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது.