சென்னை: பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் விஜய் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: ‘‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பது ஆண்டு காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றி உள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்க இயலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி. அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ என்று உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.