சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 15) ஆபரண தங்கம் கிராம், 13,180 ரூபாய்க்கும், சவரன், 1,05,440 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று தங்கம் (ஜூலை 16) விலை கிராமுக்கு, 30 ரூபாய் குறைந்து, 13,150 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் சரிவடைந்து, 1,05,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (ஜூலை 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் சரிந்துள்ளது.

வெள்ளி நிலவரம்: வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 235 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.