சென்னை, செப்.13-
: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக சார்பில் 11 அமைச்சர்கள், 9 எம்.எல்.ஏக்கள் கொண்ட பொறுப்புக் குழுவை அமைத்துள்ளார் தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்.
தமிழகத்தில் அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் 9 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தல்
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று, பின்னர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதிக்கும், சத்தியபாமா தாராபுரம் தொகுதிக்கும் தவெக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக சார்பில், மதுராந்தகம் தொகுதியில் இ.பரந்தாமன் தாராபுரம் தொகுதியில் சுகன்யா ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மதுராந்தகம் தொகுதி தவெக தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தாராபுரம் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ் நியமனம் செய்யப்பட்டு
ள்ளனர்.. 2 தொகுதி இடைத்தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல்குமார் நியமிக்கப்பட்டு
ள்ளனர்.
தேர்தல் பணிக்குழு
தேர்தல் கண்காணிப்பா
ளர்களாக அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தாராபுரம் தொகுதிக்கு அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு
ள்ளனர்.
மதுராந்தகம் தொகுதி
பொறுப்பாளர்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. இணைப் பொறுப்பாளர்கள்: 1. அமைச்சர் ராஜ்குமார். அமைச்சர் தென்னரசு, அமைச்சர் வினோத், துணைப் பொறுப்பாள
ர்களாக எம்.எல்.ஏ.க்கள் சரவணமூர்த்தி, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, தியாகராஜன், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, விஜயராஜ், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி காமாட்சி பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி, பாலாஜி (எ) மணிகண்டன் செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
தாராபுரம் தொகுதி
பொறுப்பாளர்: அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், இணைப் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் விஜய் பாலாஜி, விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன், துணைப் பொறுப்பாளர்க
ளாக எம்.எல்.ஏ.க்கள் பாலமுருகன், திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி சத்தியபாமா, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி ராம்குமார், பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு திலீப், நாமக்கல் சட்டமன்றத் தொகுதி திருமதி சத்யா, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி.
மேற்கண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் கண்காணி
ப்பாளர்கள், இரண்டு தொகுதிகளின் தேர்தல் பணிகளைக் கண்காணி
ப்பார்கள்.
அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வெற்றிச் சின்னமாம் விசில் சின்னம், மீண்டும் வாகை சூட வேண்டும். இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதிகளில் நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.