சென்னை, செப். 3-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டின் நகரங்களில் குடிநீர், பாதாள சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, சாலைகள் மற்றும் பள்ளி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பி பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் காலத்திற்கேற்ப பல மேம்பாடுகள் தேவைப்படுகின்றன. இதுதொடர்பாக பொதுமக்களிடமிருந்து பல கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. அவற்றை பூர்த்தி செய்யும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகின்றன.
விஜயின் புதிய அறிவிப்புகள் என்ன?
அந்த வகையில், மக்களுக்க்கு தேவையான குடிநீரை தடையின்றி வழங்கும் வகையில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில், மீஞ்சூரில் நாளொன்றிற்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
ஆவடி மாநகராட்சியயில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் 500 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதியை பயன்படுத்த 1000 கோடி ரூபாயும், பழமையான 33 கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க முதற்கட்டமாக 300 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.
சென்னை கீழ்ப்பாக்கம்குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூ. 410 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்
மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பைச் சீரமைக்க முதற்கட்டமாக ரூ.2,400 மதிப்பீட்டில் நடப்பாண்டில் பணிகள் மேற்கொள்ள
ப்படும்
நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும், குன்றத்தூர் மற்றும் நந்திவரம்-கூடு
வாஞ்சேரி நகராட்சிகளிலும் ரூ. 960 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்த
ப்படும்
சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த ரூ. 236 கோடி செலவிடப்படும்
திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 256 கோடி மதிப்பீட்டில் 9 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், சேலம் மாநகராட்சியில் ரூ. 291 கோடி மதிப்பீட்டில் 10 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், ‘திடக்கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள்’ (Waste to Energy Projects) செயல்படுத்தப்படும். இத்திட்டங்கள் மொத்தம் ரூ. 547 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
மேம்படுத்தப்பட்ட நகர்ப்புர சாலைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்பு சாலைகளை சீரமைக்க, புதிய சாலைகள் அமைக்க, சென்னை உட்பட அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் ரூ. 1,850 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்
படும்.
பள்ளிகளைச் சுற்றி, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாலை வசதிகள் (Safe Access to Schools) மற்றும் 105 சாலை (Improvement of Traffic Islands) ரூ. 110 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்
பிற மாநகராட்சிகளிலும் இதேபோன்ற மேம்பாட்டுப் பணிகள் ரூ. 165 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் அனைத்தும் ரூ. 275 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டுத்திட்டமாக செயல்படுத்தப்படும்” என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.