சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 5 மாவட்டங்களுக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நீர்வளத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. இதனால், வடகிழக்குப் பருவமழையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகத் தற்போது ரூ. 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி மூலமாக அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி , கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பாலாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரூ.42 கோடி தமிழக அரசு இதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. நீர்வளத்துறை மூலமாக இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, 202 இடங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரையில் 26 பணிகள் இதன் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், இதற்காக ரூ. 22 கோடியும், மற்ற பகுதியில் 126 பணிகள் என்ற அடிப்படையில் ரூ. 19 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தமிழக அரசு தயார் நிலையில் ரூ. 42 கோடி நிதி ஒதுக்கிப் பணிகளைத் தற்போது மேற்கொண்டு வருகிறது.