மதுரை, செப். 17-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் ஓதுவார்கள் புறக்கணிக்கப்படுவதாக தமிழ் ஓதுவார்கள் குற்றச்சாட்டு மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு - அமைச்சர் அவர் சார்ந்த சமூகத்தினரை மட்டும் அனுமதிக்க முயல்கிறார்
தமிழ் ஓதுவார்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பாக ஆர்ப்பாட்டம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் 10 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று முடிவடைந்தது. இன்று காலை பரிவார மூர்த்திகளுக்கான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேக விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் தமிழ் ஓதுவார்களை கருவறைக்கு அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி சேலம் சத்தியபாமா தலைமையில் தமிழ் ஓதுவார்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பாபிஷேக விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம்
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது : கும்பாபிஷேக விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் தமிழ் ஓதுவார்களை கருவறைக்கு அனுமதிக்கவில்லை அமைச்சர் அவர் சார்ந்த பிராமணர் சமூக அர்ச்சகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் தேர்வான அர்ச்சகர்களையும் அனுமதிக்கவில்லை., தமிழ் ஓதுவார்களை ஓரம்கட்டி விட்டு சமஸ்கிருத ஓதுவார்களை மட்டும் அனுமதிக்கின்றனர். அமைச்சர் அவர் சார்ந்த சமூகத்தினரை மட்டும் அனுமதிக்க முயல்கிறார்; சமஸ்கிருத ஓதுவார்களுக்கு இணையாக தமிழ் ஓதுவார்களை அனுமதிக்க வேண்டும்; கும்பாபிஷேக விழாவில் சாதிய தீண்டாமை நடைபெறுகிறது; தமிழ் ஓதுவார்கள் அனுமதி குறித்து இணை ஆணையர் எதுவும் தெரிவிக்கவில்லை என்றனர்.
தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு - அமைச்சர் தகவல்
தமிழ் ஓதுவார்கள் யாக பூஜைகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டுஅரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை. கலசத்தில் நீர் ஊற்றவும், கருவறை செல்லவும் தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதி உண்டு. - என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.