இது தொடர்பாக கே.என்.நேரு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஆய்வும், கருத்துக் கணிப்புகளும் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் நிறுவ மக்கள் உறுதியெடுத்து விட்டதை காட்டுகின்றன. டெக்கான் க்ரானிகல் பத்திரிகை எழுதியிருந்த ஆய்வு கட்டுரையும், இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பும் அதனை மெய்பிக்கின்றன.

முதல்வரின் தலைமையில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி தொடர்ச்சியாக எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறும் கூட்டணியாக தி.மு.க. அணி இருக்கிறது. 2026 தேர்தலிலும் தி.மு.க. வெல்லும். அதனை கருத்துக் கணிப்புகளும் உறுதி செய்கின்றன. தமிழக மக்களின் குறிப்பாக பெண்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று அசைக்க முடியாத அரசாக விளங்குகிறது திராவிட மாடல் அரசு. திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழகத்தின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள். தமிழகத்தில் இருக்கும் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்று 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. அடையப் போகும் வரலாற்று வெற்றியில் பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கும்.

பெண்களை முன்னேற்று திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது. இது போன்றத் திட்டங்கள் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திவரும் மறுமலர்ச்சியை கண்டு வயிற்றெரிச்சலில் திரிபவர்கள், உண்மைகளை ஜீரணிக்க முடியாமல், அவதூறுகளை நாள்தோறும் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிருக்கிறார்கள். திராவிட மாடல் அரசே தொடர வேண்டும் எனும் தமிழகத்தின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. அடையப் போகும் வரலாற்று வெற்றி நிரூபிக்கும். அதற்கு தி.மு.க. ஆட்சியில் பயன்பெறும் பெண்கள்தான் மகுடம் சூட்டுவார்கள். இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு அதில் தெரிவித்துள்ளார்.