மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகவளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில் கீழமாத்தூர் ஊராட்சி செயலாளர் விஜயபாஸ்கர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஊராட்சி செயலாளர்கள் பிரபு கண்ணன் ராஜமணி வேல்முருகன் பரமசிவம் ஜெகதீஷ் ரமேஷ் மற்றும் சகாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றிய ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் தேர்தலை காரணம் காட்டி இரண்டு மாதமாக எந்த ஒரு பணியும் நடைபெறாத நிலையில் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள கூடுதல் இணை உதவி இயக்குனர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும். அரசின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களை நிரப்பிட வேண்டும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே அரசுத்துறை செயலாளர்கள் ஒத்துக் கொண்ட அந்த பணியிட உயர்வு மற்றும் காலி பணியிடங்களில் நிரப்பும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்ததோடு மட்டுமல்லாமல் கடுமையான தனிச்சுமையின் காரணமாக மன உளைச்சலோடு பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டனர். குறிப்பாக அரசு தேர்வு எழுதி வரக் கூடிய இளைய தலைமுறையினர் பதவி உயர்வு பெறாமலேயே உதவியாளராக நீண்ட காலம் பணியாற்றக்கூடிய சூழ்நிலையும் இருப்பதாகவும் தெரிவித்தனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு ஊரக வளர்ச்சி துறை காலி பணியிடங்களை உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.
பொழுதுபோக்கு
Latest Posts
திருப்பரங்குன்றம் விவகாரம்: ஐகோர்ட் கிளை உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
இந்தியா