மதுரை, செப்டம்பர் 5, 2026: உலக முதுகுத்தண்டுவடக்காயம் தினத்தை முன்னிட்டு, முதுகுத்தண்டுக் காயங்களைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், "விழிப்புணர்விலிருந்து செயல்பாட்டிற்கு: SCI தடுப்பில் 10 ஆண்டுகால முன்னேற்றம்" என்ற கருத்தை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கிலும், சனிக்கிழமை மதுரையில் சக்கர நாற்காலி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.


இந்தப் பேரணியை பூவந்தி மறுவாழ்வு மற்றும் முதியோர் பராமரிப்பு நிறுவனம் மற்றும் SIPA (Spinal Cord Injured Persons Association முதுகுத்தண்டுவடக்காயமடைந்தோர் சங்கம்) இணைந்து ஏற்பாடு செய்தனர். பேரணி ராஜா முத்தையா மன்றத்திலிருந்து தொடங்கி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.


முதுகுத்தண்டுவடக்காயங்கள் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், குறிப்பாக சாலை விபத்துகள் மற்றும் விழுவதால் ஏற்படும் காயங்கள் உள்ளிட்ட முதுகுத்தண்டுவடக்காயங்களின் காரணங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தனிநபர்களும் சமூகங்களும் மேற்கொள்ள வேண்டும் என்பதை முக்கிய வலியுறுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.


இந்த பேரணியை APP.Mr. Karuppasamy Pandiyan, DDRO Mr. Swaminathan டாக்டர், ஷிபு, தலைமை மறுவாழ்வு மருத்துவ நிபுணர் மற்றும் SIPA அமைப்பின் சார்பாக திரு. ராஜமூர்த்தி அவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பூவந்தி மறுவாழ்வு மற்றும் முதியோர் பராமரிப்பு நிறுவனத்தின், மருத்துவர்கள், மறுவாழ்வு நிபுணர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், சக்கர நாற்காலி பயனாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து பேரணியை வழிநடத்தினார்.


நிகழ்ச்சியில் பேசிய பூவந்தி மறுவாழ்வு மற்றும் முதியோர் பராமரிப்பு நிறுவனத்தின் மூத்த உடலியல் மருத்துவ நிபுணர் டாக்டர் கனியரசு, இந்த ஆண்டின் உலக முதுகுத்தண்டு காயம் தினத்தின் கருப்பொருளான "விழிப்புணர்விலிருந்து செயலுக்கு: SCI தடுப்பில் பத்து ஆண்டுகால முன்னேற்றம்”, விழிப்புணர்வை அர்த்தமுள்ள செயல்பாடுகளாக மாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்துவதாகக் கூறினார்.


பாதுகாப்பான சாலைகள், பொறுப்பான வாகன ஓட்டம், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், கீழே விழுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடையே அதிகரித்த விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் பல முதுகுத்தண்டுவடக்காயங்களைத் தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். மேலும், தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்படுவதன் மூலம்


தடுக்கக்கூடிய முதுகுத்தண்டு காயங்களைக் குறைத்து மனித உயிர்களைப் பாதுகாக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


பேரணியில் பங்கேற்றவர்கள் சாலைப் பாதுகாப்பு, விழுதல் தடுப்பு. முதுகுத்தண்டுவடக்காயம் தடுப்பு மற்றும் முதுகுத்தண்டுவடக்காய- மடைந்த நபர்களின் உரிமைகள் மற்றும் சமூக உள்ளடக்கம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். 60-க்கும் மேற்பட்ட சக்கர நாற்காலி பயனாளர்கள், 250-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் நகர மக்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.சரியான ஆதரவு மற்றும் மறுவாழ்வு சேவைகள் கிடைத்தால், முதுகுத்தண்டுக்காயமடைந்த நபர்களும் சுறுசுறுப்பான, அர்த்தமுள்ள மற்றும் சுயாதீனமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை இந்தப் பேரணி வெளிப்படுத்தியது.


முதுகுத்தண்டுவடக்காயமும் அதனால் ஏற்படும் உடல் உறுப்புகள் செயலிழப்பும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் குறிப்பிடத்தக்க உடல், உளவியல், சமூக மற்றும் தொழில்சார் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், முதுகுத்தண்டுவடக்காயங்களைத் தடுப்பதே முதல் மற்றும் மிக முக்கியமான நடவடிக்கையாகும். விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவரையும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம், தவிர்க்கக்கூடிய முதுகுத்தண்டுவடக்காயங்களின் எண்ணிக்கையைக் குறைக்க சமூகங்களால் முடியும்.


மேலும், முதுகுத்தண்டுவடக்காயத்திற்குப் பிறகு வாழ்க்கை மாறக்கூடும் என்றாலும், முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சிகிச்சை, சரியான நேரத்தில் வழங்கப்படும் மருத்துவச் சேவை மற்றும் குடும்பம் மற்றும் சமூகத்தின் வலுவான ஆதரவு ஆகியவற்றின் மூலம் நல்ல வாழ்க்கைத் தரம், சுயாதீனம் மற்றும் சமூகத்தில் வெற்றிகரமான மறுஒருங்கிணைப்பு சாத்தியமாகும் என்பதையும் இந்த நிகழ்ச்சி வலியுறுத்தியது.