லண்டன்: பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய பிரதமர் ஆக ஆண்டி பர்ன்ஹம் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு துறையின் இணை அமைச்சராக இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐநா உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கான பொறுப்பு, அவரது அமைச்சகத்திடம் உள்ளது. மேலும், துணை கொறடாவாகவும் உமா செயல்பட உள்ளார்.

உமா குமரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது பெருமை அளிக்கிறது. உலகளவில் நிலையற்ற இந்த நேரத்தில் பிரிட்டனின் குரலும், சர்வதேச தலைமைத்துவமும் தற்போது கவனம் பெறுகிறது எனத் தெரிவித்து உள்ளார்.