மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் முத்து சரவணக்குமார் தலைமையில் அளித்த புகார் மனுவில்,

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது அலுவலகமும் எனது வீடும் மதுரை வடக்கு பகுதிக்கு உட்பட்டவை ஆகும். நான் வழக்கறிஞர் பணி மட்டுமின்றி மக்கள் சேவையில் என்னை அர்ப்பணிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன் ஆவேன். அந்த ஆர்வத்தின் பயனாக நான் கல்லூரியில் பயின்ற நாள் முதல் மக்கள் இயக்கத்தில் வழக்கறிஞர் பணியில் இருந்து கொண்டு மக்கள் நல பணிகளை ஆற்றி வந்ததன் அடிப்படையிலும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கையின் அடிப்படையில் கழகத்தின் அடிப்படை உறுப்பினராகவும் வழக்கறிஞர் அணியாகவும் எனது வடக்கு மாவட்டத்தின் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. கல்லாணை எம்.எல்.ஏ., அவர்களுடன் ஒன்றே பயணித்து தமிழக வெற்றி கழகத்தின் வெற்றிக்கு உறுதியாக நானும் ஒரு அங்கம் என்பதிலும் இந்திய நாட்டின் சிறந்த குடிமகன் என்பதன் அடிப்படையிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான மாண்புமிகு.திரு. ஜோசப் விஜய் அவர்கள் மீது உள்ள பற்றாலும் நாட்டின் சிறந்த குடிமகன் என்ற முறையிலும் அரசியலமைப்பு சட்டத்தினை மதிக்கும் வழக்கறிஞராகவும் உறுப்பினரான மாண்புமிகு திரு. கல்லாணை எம்.எல்.ஏ., அவர்களுக்கு எதிராக அவதூறு பரப்புவது மட்டுமின்றி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக ஒரு ஆட்சியினை கவிழ்க்கும் முறையினை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு பத்திரிக்கையான ‘நக்கீரன் “த.வெ.க விற்கு அதிர்ச்சி வைத்தியம் தயாராகும் திமுக." என்ற தலைப்பின் கீழ் பத்திரிக்கை சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யும் பொருட்டாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சதித்திட்டத்தை வெளிப்படையாக ஒரு கட்டுரையில் வெளிப்படுத்தி இருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரான பத்திரிக்கை சுதந்திரத்தை கையில் வைத்து அதிகார துஷ்பிரயோகமாக அந்த கட்டுரையின் நேற்றைய தேதியில் (24.06.2026 பக்கம் 34 மற்றும் 35) எனது மாவட்டச் செயலாளரும் மதிப்பிற்குரிய வடக்கு மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினருமான திரு.கல்லணை அவர்களை ஏதோ பணத்திற்கும், பதவிக்காகவும் ஒரு ஆட்சியை அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலமைப்பின் கீழ் ஆட்சி அமைத்து பெற்ற ஒரு அரசாங்கத்தினை கவிழ்த்த முன் வருவார் என்று உண்மைக்கு மாறாகவும் அவர்கள் ஆட்சிக் கவிழ்க்கும் திட்டத்தில் எனது சட்டமன்ற உறுப்பினரும் ஒரு அங்கம்/கூட்டாளி போல சித்தரித்துள்ளது இதற்கு பாரதிய நியாய சங்கீதா-2023 சட்டத்தின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றமாக கருதி மேற்படி பத்திரிக்கை நாளிதழ் மீதும் அதன் ஆசிரியர் மீதும் தகுந்த சட்ட எனது வடக்கு மாவட்டத்தின் சட்டமன்ற

நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.