மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு இன்று 25.06.2026 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ,அறங்காவலர் குழுத் தலைவர் திருமதி. ருக்மணி பழனிவேல் ராஜன் மற்றும் அறங்காவலர்கள், திருக்கோயில் இணை ஆணையர் / நிர்வாக அதிகாரி, உதவி ஆணையர் /நேர்முக உதவியாளர். பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், அர்ச்சகர்கள், பணியாளர்கள். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#முகூர்த்தக்கால்
#குடமுழுக்கு
#மீனாட்சிசுந்தரேசுவரர்
#மதுரை