பெரம்பலூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரபல சின்னத்திரை நடிகை தேவி பிரியாவின் கார் விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் உயிரிழந்தார்.

பல சீரியல்களில் வரும் நடிகை தேவி பிரியா, சென்னையில் இருந்து பெரம்பலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவில் கார் பாடலூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது திடிரென பஞ்சமானது. இதையடுத்து கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இருவரும் காரின் டயரை மாறிக்கொண்டிருந்த போது, பின்னால் வந்த வாகனம் இவர்களின் கார் மீது பயங்கரமாக மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார். நடிகை தேவிப்பிரியா சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் அவரது உதவியாளர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருகிறார்.