காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு.

நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம். என மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்திருந்த சூழ்நிலையில்


செவ்வாய் கிரகத்தை அடுத்த அம்பாசமுத்திரம் பகுதியிலும் வீனஸ் கிரகத்தை அடுத்த ஆவடி பகுதியிலும் மின்வெட்டு ஏற்பட்டதால் அந்த கிரகங்களில் வசிக்கும் ஏலியன்கள் தீப்பந்தங்களை ஏந்தி போராட்டம் நடத்தினர்.


என நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.


இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,




"தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்னை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் நிர்மல்குமாரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார். மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் ‘ப்யூஸ் போன' த.வெ.க அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ள நிலையில், கடுப்பான அமைச்சர் நிர்மல் குமார் அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு இட்டுள்ளார்.

இன்று இரவு கரண்ட் கட் கிடையாது மக்களே நிம்மதியாக தூங்கலாம் தமிழ்நாடு மின்வாரிய சேர்மன் அருண் ராய் அனைத்து பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் இன்றிரவுக்கான மின்சாரம் போதுமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எனவே மின் விநியோகக் கட்டமைப்பில் (grid) எந்தப் பிரச்சனையும் இருக்காது. சமீபகாலமாக எதிர்மறையான செய்திகள் அதிகம் பரவி வருவதால், இன்றிரவு எவ்விதப் புகாரும் அல்லது அசம்பாவிதமும் இல்லாத நிலையை நாம் உறுதி செய்ய வேண்டும். அதற்காக, உள்ளூர் அளவிலான மின் விநியோகப் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். AE முதல் SE வரையிலான அனைத்து அதிகாரிகளும் இன்றிரவு கள ஆய்வில் (night round) ஈடுபட்டு, புகார்கள் சரிசெய்யப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 'மின்னகம்' (Minnagam) மூலம் பெறப்படும் புகார்களை SE-க்கள் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், CE-க்கள் அவ்வப்போது கள நிலவரத்தைக் கேட்டறிந்து, அது குறித்த தகவல்களை இந்தக் குழுவில் பதிவிட வேண்டும். இன்றிரவு எவ்விதத் தடங்கலும் இல்லாத மின் விநியோகத்தை உறுதி செய்வோம் என்று அதில் தெரிவித்துள்ளார்..



தொடர்ந்து தனது துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தராமல் மிசா சட்டம் குறித்து பேசுவது மதுராந்தகம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன் குறித்து பேசுவது என அமைச்சர் நிர்மல் குமார் கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.