சென்னை: சென்​னை​யில் நடந்த மறைமலை அடிகள் பிறந்​த​நாள் விழா​வில் பேசிய குன்​றக்​குடி பொன்​னம்பல அடிகளார், நாட்​டில் மக்​களுக்கு கல்​வி​யும், அறி​வியலும் அவர​வர் தாய்​மொழி​யில் கிடைத்​தால் அந்த நாடு செல்வ வளர்ச்​சி​யில் எளி​தாக முன்​னேறும் என தெரி​வித்​தார்.


தமிழ் வளர்ச்​சிக் கழகம், சென்னை பல்​கலைக்​கழகத்​தின் சைவ சித்​தாந்​தத்​துறை, தமிழ் மொழித்​துறை மற்​றும் தமிழ் இலக்​கி​யத்​துறை சார்​பில், மறைமலை அடிகளின் 150-வது பிறந்​த​நாள் விழா, சென்னை பல்​கலைக்​கழகத்​தில் நடை​பெற்​றது. தமிழ் வளர்ச்​சிக் கழகத்​தின் தலை​வர் ம.ராசேந்​திரன் தலை​மை​யில் நடந்த விழா​வில், குன்​றக்​குடி பொன்​னம்பல அடிகளார் பங்​கேற்று உரை​யாற்​றினர். அப்​போது, அவர் பேசி​ய​தாவது: மறைமலை​யடிகள் சித்​தாந்​தத்​தி​லும் கரை கண்​ட​வர். திரு​முறை​களி​லும் கரை கண்​ட​வர். இரண்​டை​யுமே முன்​னெடுத்து சென்​றவர். குறிப்​பாக, தமிழுக்கு அவர் ஆற்​றி​யிருக்​கும் பெரும் தொண்டு எண்​ணிலடங்​காது. திரு​வாசகம் நம் உயிரோடு, உடலோடு கலந்​தது. ஒரு மொழி​யால் அறிவை பெறலாம். ஒரு மொழி​யால் ஞானத்தை பெறலாம். ஒரு மொழி​யால் வீடு​பேற்றை அடைய முடி​யுமா என்​பதை இந்த மண்​ணில் நிரூபித்து காட்​டியது திரு​வாசகம். அப்​படிப்​பட்ட திரு​வாசகத்​துக்கு 1,300 பக்​கங்​கள் கொண்ட அற்​புத​மான, ஆழமான விரிவுரை வழங்​கிய​வர் மறைமலை அடிகள்.


மறைமலை​யடிகளின் வாழ்க்கை வரலாறு அற்​புத​மானது. இளைய தலை​முறை அதை தெரிந்து கொள்ள வேண்​டும். மனித குலத்​துக்கு வரும் துன்​பங்​களை எது இன்​ப​மாக மாற்​றிக் காட்​டு​கிறதோ அதற்கு பெயர்​தான் அறி​வு. மக்​கள் பேசும், எழுதும் மொழி​யில் கல்​வி, அறி​வியல் பரப்​பப்​படும்​போது அந்த நாடு செல்வ வளர்ச்​சி​யில் எளி​தாக முன்​னேறும். அதேவேளை​யில் அறி​வியலும், தொழில்​நுட்​ப​மும் கடைக்​கோடி மக்​களை​யும் சென்​றடை​யும். அதற்கு தாய்மொழி வழிக் கல்​வி​யும், அறி​வியலும் தேவைப்​படு​கிறது. இதை 130 ஆண்​டு​களுக்கு முன்பே மறைமலை​யடிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இவ்​வாறு அவர் பேசி​னார். இந்​நிகழ்​வில், இலங்கை எம்பி க.ச.கு​க​தாசன், ஓய்​வு​பெற்ற மாநில தகவல் ஆணை​யர் சாரதா நம்பி ஆரூரன், சென்னை பல்​கலை. துணைவேந்​தர் பொறுப்​புக்​குழு உறுப்​பினர் எஸ்​.ஆம்​ஸ்ட்​ராங், பதி​வாளர் ரீட்டா ஜான், சைவ சித்​தாந்​தத்​துறை தலை​வர் சா.சர​வணன், தமிழ் மொழித்​துறை தலை​வர் வாணி அறி​வாளன், தமிழ் இலக்​கி​யத்​துறை தலை​வர் வே.நிர்​லமர் செல்வி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.