மதுரை, செப்.3-

தமிழக வெற்றி கழகம் இதற்கு பதிலாக தற்குறி வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்து கொள்ளலாம் எனவும், தாய்மொழி தமிழை கூட படிக்கத் தெரியாதவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களாக இருக்கின்றனர் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” 100 நாட்கள் தவெக ஆட்சி சினிமா படம் பார்க்கும் மாதிரி தான் இருக்கிறது. எதார்த்தமான ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் சம்பந்தமில்லை. இன்ஸ்டா ரீல்ஸ் போட்டு இளைஞர்களையும் இளம் பெண்களையும் கவர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மாபெரும் வளர்ச்சி, மாற்றம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறு

திகளை வழங்கினார்கள் அவர்களே ஆட்சிக்கு வருவோம என்று தெரியாமல் இருந்த நிலையில் இன்றைக்கு 108 தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

டிடிவி தினகரன்

ஆனால், இதில் எனக்கு வருத்தம் உள்ளது. தமிழ்நாடு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் சினிமா கதாநாயகன் மேல் உள்ள நம்பிக்கையில் படித்த இளைஞர்களும் இளம்பெண்களும் குறிப்பாக வாக்களித்ததோடு இல்லாமல் தங்கள் வீட்டில் இருந்தவர்களை வற்புறுத்தலுக்கு உட்படுத்தி தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என அனைவரையும் வாக்களிக்க வைத்திருக்கிறார்கள்.

தவெக அரசு

தாய்மொழி தமிழை கூட படிக்கத் தெரியாதவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள். மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கல்லணை மதுரை காமராஜர் யுனிவர்சிட்டி அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என்று சொல்லுகிறார். அவ்வளவு தான் அவருக்கு அறிவு இருக்கிறது. அமைச்சராக இருக்கிறவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தாய்மொழி தமிழை கூட ஒழுங்காக பேச தெரியவில்லை. அடிப்படை அ - ஆ கூட தெரியவில்லை. ஆங்கிலமும் தெரியவில்லை. தற்குறிகள் சொன்னால் சரியான உதாரணம் இவர்கள்தான். சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் பார்ப்பது 23ஆம் புலிகேசி படம் போல் உள்ளது.

அடிப்படை அறிவு

இவர்களுக்கு அடிப்படை அறிவு எதுவும் கிடையாது. படிப்பறிவில் வளர்ந்த தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்துள்ளது. GENZ தலைமுறைகள் மற்றும் இளைஞர்கள் யாரென்று தெரியாத நபரை தவறான ஆட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். ஆதவ் அர்ஜூனா மில்லி லிட்டர் என சொல்ல தெரியாமல் மில்லி மீட்டர் என்கிறார். தமிழ் பேச தெரியாது என சொன்னால் கிறிஸ்துவ மதம் என நிதியமைச்சர் சொல்கிறார்.

விஜய்

மதத்திற்கும் மொழிக்கும் என்ன சம்மந்தம். பலகட்சி நிர்மல்குமார் ஏதோஎதோ பேசுகிறார் சபாநாயகர் நடுநிலையாக பேசுவதுபோல அமைச்சர்களை தவறான கருத்தை பேசவைக்கிறார். மாற்றம் வேண்டும் என்ற காரணத்தை சொல்லி இளைஞர்கள் தற்போதைய அரசியலுக்கு எதிராக இருக்கிறார்கள். .இப்போது சினிமா கவர்ச்சியை நம்பிதான் கொண்டு

வந்திருக்கிறார்கள். விஜயை வெற்றிபெற வைத்தது நியாயம், ஆனால் அவர்களது வேட்பாளர்களை எப்படி வெற்றி பெற வைத்தார்கள்?

தமிழக வெற்றி கழகம்

தவெக அமைச்சர் எம்எல்ஏக்கள் மீது வருத்தம் இல்லை. வாக்களித்த மக்களை நினைத்து தான் வருத்தம்.

மோசமான ஆட்சி களப்பிறளர்கள் ஆட்சி போன்ற இருண்ட ஆட்சி , தமிழ்மொழியை சொல்லி கொடுத்தாலும் வராது , அடிப்படை தமிழ் அறிவே வராது. தமிழக வெற்றி கழகம் இதற்கு பதிலாக தற்குறி வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்து கொள்ளலாம். உங்களை விமர்சிப்பது நமக்கு அசிங்கமாக உள்ளது இதற்கு ஒரு முடிவு இறுதியாக வரும்.” என்றார்.