சென்னை: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டார்.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவ் தாஸ் மீனா மற்றும் அதன் உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக பதவி விலகினர். இதையடுத்து, இந்த ஆணையத்தை தமிழக அரசு தற்காலிகமாக கலைத்தது. இந்த நிலையில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரங்களையும், பொறுப்புகளையும் கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி தலைமையில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி நசீர் அகமது, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரீஷ் தக்கர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 6 மாதங்களுக்கோ அல்லது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கும் வரையில் இந்தக் குழு செயல்படும் என்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.