புதுடில்லி: மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொகை ரூ.1,09,019 கோடியில் தமிழகத்திற்கு ரூ.4,466 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொகை ரூ.1,09,019 கோடியை மத்திய அரசு விடுவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்படும் தொகையுடன் கூடுதல் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் மூலதன மற்றும் மேம்பாட்டுச் செலவினங்களை விரைவுபடுத்தவதற்காக இந்தக் கூடுதல் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மொத்தம் விடுவிக்கப்பட்ட ரூ.1,09,019 கோடியில், தமிழகத்திற்கு ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.19,208 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பீஹாருக்கு ரூ.10,845 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.8,010 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.7,866 கோடியும், மஹாராஷ்டிராவுக்கு ரூ.7.022 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.6,460 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.4,819 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.4,597 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.