நீட் தேர்வு வினாத்தாள் கசிவை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்திரில் கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து திரைப் பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று காலை நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். ஜனநாயக இந்தியாவையும், சீர்திருத்தப்பட்ட கல்வி முறையையும் நான் ஆதரிக்கிறேன். அரசை எதிர்த்து துணிச்சலாக போராடும் மாணவர்கள் மற்றும் சோனம் வாங்சுங் ஆகியோருக்கு எனது பாராட்டுகள். தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை அப்ஜித் தீப்கே மற்றும் சவுரவ் தாஸ் போல உருவாக்க நினைக்கிறோம். Gen Z தலைமுறையை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நாம் அனைவரும் இந்தியாவில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை மாணவர்கள் நிரூபித்து விட்டார்கள்” என ஜோதிகா பதிவிட்டுள்ளார்.