சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி வேளச்சேரியில் நேற்று தொடங்கியது. முதல் சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரினுடன் மோதினார். இந்த ஆட்டம் 47-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதனால் இரு வருக்கும் தலா 0.5 புள்ளி வழங்கப்பட்டது. உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டரான நோதிர்பெக் அப்துசத்தோரோவ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹான்ஸ் நீமனுடன் மோதிய ஆட்டம் 44-வது நகர்த்தலின் டிராவில் முடிவடைந்தது. இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி, ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான டிமிட்ரி ஆண்ட்ரெய்கின் மோதிய ஆட்டமும் 42-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா ஆனது. கடந்த ஆண்டு சாலஞ்சர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான எம்.பிரணேஷ் தனது முதல் சுற்றில் பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஜாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய அலிரேசா ஃபிரோஜா 79-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதனால் அவர், முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார். இன்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: முதல் சுற்றில் குகேஷ் டிரா
July 17, 2026
விளையாட்டு
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்
September 19, 2026
மதுரையில் பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை- கும்பல் வெறிச்செயல்
தமிழகம்