தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில மையம் சார்பில், மாநில அளவிலான கோரிக்கைக் மாநாடு வரும் நவம்பர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் N. ஆனந்த் MLA, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மாநாட்டின் சிறப்புரையாற்றுபவராகப் பங்கேற்க உள்ளார்.
ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் நடைபெறும் இந்த மாநில அளவிலான மாநாட்டில், தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலாளர்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் எனச் சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதன்படி, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ, மதுரை மாவட்டத் தலைவர் கணேசன், மாவட்டச் செயலாளர் குமார், பொருளாளர் விவேகானந்தன் மற்றும் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜோதிபாசு ஆகியோர் ஊராட்சி செயலாளர்கள் அனைவரும் மாநாட்டில் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டைச் சிறப்பிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
மாநாட்டு விவரங்கள்:
நாள்: 14.11.2026, சனிக்கிழமை
நேரம்: காலை 11.00 மணி
இடம்: சென்னை
தொடர்புக்கு: 9944751122