தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ரசிகர் மன்றம் சார்பில் நடந்த சந்திப்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுடன் 6 மணி நேரம் தொடர்ச்சியாக பேசி அவர்களை மகிழ்வித்தார். ஏராளமான ரசிகர்களுடன் தனித்தனியாக பேசி அவர்களின் குடும்ப விவரங்கள், வேலைவாய்ப்பு போன்ற விவரங்களை கேட்டு அறிந்து கொண்டார்.
பின்னர் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிய அல்லு அர்ஜுன் "உங்களின் ஆர்வத்தையும், இளமை ஆற்றலையும் சரியான முறையில் ஆக்கப்பூர்வமான செயல்களில் செயல்படுத்துங்கள். சமூகத்திற்கு பயனுள்ள வகையில் உங்களது பங்களிப்பு இருக்க வேண்டும். என் பெயருக்கு நீங்கள் தூதுவர்கள் என்பதால் சமூக வலைதளங்களில் மற்ற நடிகர்களையோ அவர்களது ரசிகர்களையோ விமர்சிக்க கூடாது , வெறுப்பை பரப்ப வேண்டாம்" என்று அறிவுரை வழங்கினார்.