மதுரை, ஆகஸ்ட் 3, 2026: இந்தியாவின் முன்னணி வேளாண்-புரத மதிப்புச் சங்கிலி நிறுவனங்களில் ஒன்றான கோத்ரெஜ் அக்ரோவெட் லிமிடெட் (Godrej Agrovet), தனது பயிர் பாதுகாப்புத் தீர்வுகளான அஷிடாகா (Ashitaka) மற்றும் TAKAI மூலம் தமிழ்நாட்டு மக்காச்சோள விவசாயிகளுக்கான தனது ஆதரவை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் அஷிடாகா மற்றும் டக்காய் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மக்காச்சோளத்தின் மகசூலை பாதிக்கும் முக்கியமான களை மற்றும் பூச்சித் தாக்குதல் சவால்களுக்கு தீர்வு காண விவசாயிகளுடன் இணைந்து கோத்ரெஜ் அக்ரோவெட் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மக்காச்சோள சாகுபடி பரப்பளவு அதிகரித்து வரும் நிலையில், பயிரின் ஆரம்ப வளர்ச்சி நிலையில் ஏற்படும் களைப் போட்டியும், Fall Armyworm (படைப்புழு) போன்ற புழுக்களின் தாக்குதலும் விவசாயிகளுக்கு தொடர்ந்து முக்கிய சவால்களாக உள்ளன. இவற்றை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், மகசூலில் கணிசமான இழப்பு ஏற்படக்கூடும்.
உலகளவில் மக்காச்சோள சாகுபடி பரப்பளவில் இந்தியா நான்காவது இடத்திலும், உற்பத்தியில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. அதேவேளையில், தமிழ்நாடு உற்பத்தித்திறன் சார்ந்த வளர்ச்சியில் தனித்துவம் பெற்றுள்ளது. மாநிலத்தில் சுமார் 13.3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சுமார் 33 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மதுரை மண்டலத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள சாகுபடி நடைபெறுகிறது.
உணவு, கால்நடைத் தீவனம் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கான மக்காச்சோளத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பயிரின் மகசூல் திறனைப் பாதுகாப்பதும், வயல்வெளி உற்பத்தித்திறனை மேம்படுத்துவதும் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கோத்ரெஜ் அக்ரோவெட் கருத்து
இதுகுறித்து, கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் Crop Care Business பிரிவின் தலைமை செயல் அதிகாரி N.K. ராஜவேலு கூறுகையில்:
“தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மக்காச்சோளம் ஒரு முக்கியமான பயிராக உருவெடுத்து வருகிறது. ஆனால், அதன் முழுமையான மகசூல் திறனைப் பெற அறிவியல் அடிப்படையிலான பயிர் மேலாண்மையும், பயிரின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் அவசியம்.
பயிரின் ஆரம்ப வளர்ச்சி நிலையில் களைகளை திறம்பட கட்டுப்படுத்துவதும், Fall Armyworm(படைப்புழு) போன்ற புழுக்களை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது மகசூல் திறனைப் பாதுகாப்பதில் மிகவும் முக்கியமானதாகும்.
அஷிடாகா மற்றும் டக்காய், இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில் ஆராய்ச்சி அடிப்படையிலான தீர்வுகளை விவசாயிகளுக்கு வழங்குகின்றன. கோத்ரெஜ் அக்ரோவெட்டில், நவீன பயிர் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், பயிர்களின் தாங்குதிறனை வலுப்படுத்தவும், வயல்வெளியில் சிறந்த விளைவுகளைப் பெறவும் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளோம்.”
மக்காச்சோளத்தில் களை மேலாண்மைக்கு அஷிடாகா
மக்காச்சோள சாகுபடி உற்பத்தித்திறன் சார்ந்த வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், உள்ளூர் வேளாண் நிபுணத்துவத்தின் ஆதரவுடன் புதுமையான பயிர் பாதுகாப்புத் தீர்வுகளை வழங்குவதில் கோத்ரெஜ் அக்ரோவெட் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.
அஷிடாகா, மக்காச்சோளப் பயிருக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட களைக்கொல்லியாகும். இது புல்வகை மற்றும் அகன்ற இலைக் களைகளை திறம்படக் கட்டுப்படுத்த உதவுகிறது.
களைகள் 2–4 இலை வளர்ச்சி நிலையில் இருக்கும் போது, பரிந்துரைக்கப்பட்ட அளவான 50 மி.லி./ஏக்கர் அஷிடாகா, 400 மி.லி./ஏக்கர் சர்ஃபாக்டன்ட் (Surfactant) உடன் பயன்படுத்தப்படும்போது, பயிருக்கும் களைகளுக்கும் இடையிலான போட்டியைக் குறைத்து, பயிர் வலுவாக நிலைபெற உதவுகிறது.
Fall Armyworm (படைப்புழு )கட்டுப்பாட்டிற்கு டக்காய்
களை மேலாண்மைக்கு துணையாக, டக்காய், ISK Japan நிறுவனத்தின் Cyclapryn™ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு பயிர்களுக்கான புழுக்கொல்லியாகும்.
மக்காச்சோளத்தில், விதைத்த 10–15 நாட்களுக்குப் பிறகு முதல் பயன்பாடாகவும், 30–35 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது பயன்பாடாகவும், ஒவ்வொரு முறையும் 160 மி.லி./ஏக்கர் என்ற பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தலாம்.
டக்காய், Fall Armyworm (படைப்புழு)-க்கு எதிராக புழுக்கள் உணவெடுப்பை விரைவாகத் தடுத்து, நீடித்த பாதுகாப்பை வழங்க உதவுகிறது. இதன் மூலம் பயிரைப் பாதுகாத்து, அதன் மகசூல் திறனை நிலைநிறுத்த உதவுகிறது.
அஷிடாகா மற்றும் டக்காய் இணைந்து, மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய சவால்களான களை மற்றும் பூச்சித் தாக்குதலை எதிர்கொள்ள உதவுகின்றன. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களைப் பாதுகாத்து, சீரான மற்றும் சிறந்த உற்பத்தித்திறனை அடைய உதவுகின்றன.